Breaking News

தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றதன் பின்னர் அமைதி காக்குமாறு அனைவரிடமும் பிரதமர் கோரிக்கை

தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றதன் பின்னர் அமைதி காக்குமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (14) காலி சமனல விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பிரதமர் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவிக்கையில், தேர்தலின் பின்னர் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டிய தேவையில்லை. ஆகஸ்ட் 17ஆந் திகதிக்குப் பின்னர் யாரையும் தொந்தரவு செய்யாதவாறு  சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்த வாரம் முடிவதற்கு முன்னதாக எமது பணிகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இந்த நாட்டில் தெரிவுக் குழுக்களை நியமிக்க வேண்டியுள்ளது. கட்சித் தலைவர்களை அழைத்து உடனடியாக பேச்சுவார்தiயினை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்த புதிய சட்டங்கள் பலவற்றை இயற்றவேண்டியுள்ளது. 

வாரத்தில் ஐந்து நாட்கள் பாராளுமன்ற அமைர்வுகளை நடத்த வேண்டியிருந்தாலும் அதனையும் செய்து அனைத்திற்கும் அங்கீகாரத்தினைப் பெற்று எமது வேலைத்திட்டங்களை ஆரம்பிப்போம் எனவும் பிரதமர் தெரிலித்தார்.

மேற்படி கூட்டம் காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் குழுத் தலைவர் வஜிர அபேவர்தனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.ஐ.அப்துல் நஸார்