Breaking News

வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கும்முகமாக பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்படல் வேண்டும் - தேர்தல்கள் திணைக்களம் பணிப்பு

நிறுவனத் தலைவர்கள் தமது பணியாளர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கும்முகமாக விடுமுறை வழங்க வேண்டுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். 

தேர்தல்கள் திணைக்களம் மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக 40 கிலோமீற்றருக்கு உட்பட்ட தூரப் பிரதேசத்தினுள் பயணிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு அரை நாள் விடுமுறையும், 40 கிலோமீற்றருக்கும் 100 கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட  தூரப் பிரதேசத்தினுள் பயணிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு முழு நாள் விடுமுறையும், 100 கிலோமீற்றருக்கும் 150 கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட  தூரப் பிரதேசத்தினுள் பயணிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு ஒண்டரை நாள் விடுமுறையும், 250 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரப் பிரதேசத்தினுள் பயணிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
 எம்.ஐ.அப்துல் நஸார்