Breaking News

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே!

நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் தேர்தல் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில், பல்கலைக்கழக மாணவ சமுகத்தின் ஒட்டு மொத்த ஆதரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த 13ம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் ஒன்றியம் என அடையாளப்படுத்தப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. குறித்த அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தாங்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த அறிக்கை ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில் அவ்வாறான அனைத்து பீடங்களின் ஒன்றியம் என்ற ஒன்று இல்லை. குறித்த அறிக்கையின் பின்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிலர் உள்ளார்கள் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த அறிக்கையின் பின்னால் உண்மையில் தேர்தல் காலங்களில் கடைசி தருவாயில் ஏதாவது ஒரு போலியை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வேட்பாளர் தானும் மூக்கை நுழைக்க வேண்டும் என மூக்கை நுழைத்ததால் மாணவர்கள் சுய உணர்வின் பாற்பட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது பற்றுதி கொண்டு வெளியிட்ட அறிக்கை பின்னர் கூட்டமைப்பிற்கு எதிராக சில தரப்புக்களால் திசை திருப்பி விடப்பட்ட சம்பவம் நடந்தேறியது.