ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுடன் உறவு வைத்துக்கொள்ள மறுத்த 19 பெண்களை கொலை செய்துள்ளனர்.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஏராளமான பெண்களை கடத்தி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதுடன் செக்ஸ் அடிமை சந்தையில் விற்றுவிடுகிறார்கள். இந்நிலையில் தீவிரவாதிகள் ஈராக்கின் மொசுல் நகரில் பிடித்து வைத்திருந்த பெண்களில் 19 பேர் அவர்களுடன் உறவு கொள்ள மறுத்துவிட்டனர். இதையடுத்து தீவிரவாதிகள் அந்த 19 பெண்களையும் கொலை செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கொலை செய்யப்பட்டவர்கள் யசிதி இன பெண்களா என்பது தெரியவில்லை. இந்நிலையில் இது குறித்து ஐ.நா. அதிகாரி ஜெய்னப் பங்குரா கூறுகையில், தீவிரவாதிகள் தாங்கள் பிடித்து வரும் குழந்தைகள், பெண்களுக்கு தனித்தனி விலை வைத்து விற்கிறார்கள். ஒரு வயது குழந்தை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதுவே 20 வயது பெண் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறார் என்றார். முன்னதாக கடந்த ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களை திருமணம் செய்ய மறுத்த கர்ப்பிணிகள் உள்பட 100 பெண்களை தலையை துண்டித்து கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



