பெண்ணின் மார்பை தாக்கிய குண்டு! உயிரை காப்பாற்றிய Bra ...
ஜேர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவரின் உயிரை அவர் அணிந்திருந்த மேல் உள்ளாடை காப்பாற்றி இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. Rhine-Westphalia என்ற மாகாணத்தை சேர்ந்த 41 வயதான பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் இரண்டு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்றுள்ளார். அடர்ந்த காடுகள் நிறைந்த Gadebusch என்ற பகுதிக்கு அவர்கள் பயணித்த வாகனம் வந்துள்ளது. அப்போது, அங்கு வேட்டைக்காரர் ஒருவர் காட்டுப்பன்றியை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்றுள்ளார். வேட்டைக்காரர் துப்பாக்கியை வெடித்த கணப்பொழுதில் அந்த இரண்டு சக்கர வாகனம் இடையில் குறுக்கிட்டுள்ளது. அப்போது பாய்ந்து வந்த குண்டு அந்த பெண்ணின் மார்பகத்தில் பட்டு தெரித்து கீழே விழுந்துள்ளது. திடீரென தனது மார்பக பகுதியில் வலி ஏற்படுவதை உணர்ந்த அந்த பெண், பரிசோதனை செய்தபோது அங்கு சிறிய அளவில் காயம் அடைந்துள்ளதை கண்டுள்ளார். இருப்பினும், அந்த பெண் அணிந்திருந்த உள்ளாடை துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத அளவிற்கு தடினமாக இருந்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த விவரத்தை தனது கணவரிடம் தெரிவித்தபோது, அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த வேட்டைக்காரரை சந்தித்து நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர், நகருக்கு திரும்பிய அவர்கள் பொலிசாரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக பேசிய ஆண்ட்ரு பால்கே என்ற பொலிசார், விலங்குகளை வேட்டையாட கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும் அதனை பலர் மீறிவிடுகிறார்கள் என்றார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் உறுதி அளித்துள்ளனர்.



