மட்டக்களப்பு மாவட்ட ஜனநாயக கட்சி இணைப்பாளரும் முன்னால் மட்டக்களப்பு மாநகர சபை மேயருமான திருமதி .சிவகீதா பிரபாகரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டார் .
இதனை தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் மகாநாடு இன்று மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இடம்பெற்றது.
இக்கட்சியில் இணைந்துகொள்ள காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும் தனது தந்தையின் அரசியல் பணிகளை தொடர்ந்து செய்வதற்காகவும் தான் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டதாக தெரிவித்தார்
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் பிரதி அமைச்சர் எம் .ஐ .எல் . ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் இணைப்பாளர் இராஜன் மயில்வாகனம் மற்றும் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்
(லியோன் )


