Breaking News

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த மறைந்த கலாநிதி அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த மறைந்த கலாநிதி அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று காலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இடம்பெற்றது .

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் சங்க தலைவர் சட்டத்தரணி எம் .கணேசராசா தலைமையில் மறைந்த கலாநிதி அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது . ஆரம்ப நிகழ்வாக அன்னாரின் ஆத்மா சாந்திக்காக சுடர் ஏற்றப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது அதனை தொடர்ந்து அன்னாரின் வாழ்க்கை வரலாறும்,சாதனைகளும்  தொடர்பான உரை இடம்பெற்றது . இந்நிகழ்வில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர் .
(லியோன்)