மாயமான மலேசிய விமான தேடல்: லா ரீயூனியன் தீவில் கரை ஒதுங்கிய மேலும் ஒரு விமான பாகம்
பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இந்திய பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமானத்தின் மேலும் ஒரு பகுதி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. வால் பகுதி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் 'இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீ யூனியன் தீவில்' (மொரீஷியஸுக்கு அருகே உள்ளது) கடந்த புதன்கிழமை விமானத்தின் வால் பகுதி ஒன்று கரை ஒதுங்கியது.



