Breaking News

2015 பொது தேர்தலில் மட்டக்களப்பு ஐ.தே.க வேட்ப்பாளர் மாமாங்கராஜா தன் சகவேட்ப்பாளருடன் வாக்குகளை பகிர்ந்து கொண்டமை தொடர்பில் முறைப்பாடு.

நடைபெற்று முடிந்த  2015  பொது தேர்தலில்  மட்டக்களப்பு  மாவட்டத்தில்   ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட  மாமாங்கராஜா  அத்தேர்தலில் தோல்வி அடைய செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

இது தொடர்பாக தெரிவிக்கையில்  கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட  இவர்  இத்தேர்தலில்  இவருக்கு கிடைக்கப்பெற்ற  வாக்குகளில்  10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள்  தமது கட்சியில் போட்டியிட்ட  சக  வேட்பாளர் ஒருவருக்கு பகிரப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

தமக்கு கிடைக்கப்பெற்ற  வாக்குகள் வேறொருவருக்கு வழங்கப்பட்டமை  தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும் இதற்குரிய தீர்க்கமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு உரிய அதிகாரிகள் கவணத்தில் கொள்ளாதையிட்டு தாம் இது தொடர்பாக மத தலைவர்களிடம் முறையிட்டு வருவதாகவும் தெரிவித்த மட்டக்களப்பு  மாவட்டத்தில்   ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட  மாமாங்கராஜா,  இதுதொடர்பாக  இன்று மாலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார்.
( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )