Breaking News

விசேஷதேவை உடையோர் சாதாரணமானவர்கள்போல் சமூகத்தில் உலாவச்செய்யும் வகையிலான விசேட விழிப்புணர்வு நடன பயிற்சிப்பட்டறை.

விசேஷதேவை  உடையோர் எதிர்நோக்கு பிரச்சினைகளை துடைத்தெறிந்து சாதாரணமானவர்கள்போல் அவர்களையும் சமூகத்தில் உலாவச்செய்யும் வகையிலான விசேட விழிப்புணர்வு நடன பயிற்சிப்பட்டறையொன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய மண்டபத்தில் இடம்பெற்றது .

உலகளாவிய ரீதியில் விசேஷதேவை  உடையோர் நலன்களுக்கு சார்பாக செயற்பட்டுவரும் விஸ் அபிலிட்டி  என்னும் அமைப்பு  ஊனமுற்றவர்களையும் ஊனம் அற்றவர்களையும் இணைத்து கலப்பு முறையிலான நடன பயிற்சி பட்டறையினை நிகழ்வினை மேற்கொண்டுவருகின்றது.

விஸ் அபிலிட்டி அமைப்பின் தலைவியும் விசேஷதேவை  உடைய பெண்னான கர்தா கூனிங் மற்றும் நடன கலைஞர் மகேஸ் உமகிலிய,மனித உரிமை செயற்பாட்டாளர் ஹெலானா உள்ரிகே,மாரிங்கியோ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கையின் பொலநறுவை,அனுராதபுரம்,அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த நிகழ்வுகளை நடாத்தப்படவுள்ளதாக விஸ் அபிலிட்டி அமைப்பினர் தெரிவித்தனர்.
( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )