Breaking News

மட்டக்களப்பு நகரில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் சுற்றுலா தகவல் மையம்.

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா தகவல் மையம் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களை அறிந்துகொள்ளும் வகையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் சுற்றுலாத்துறை ஊடாக கிராமிய பொருளாதாரத்தினையும் வளர்க்கும் வகையில் செயற்படவுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

நீதிமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றுலா மையமானது ஆசிய பவுண்டேசன் 2.9மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு மாநகரசபை இடத்துடன் இணைந்ததாக 1.8மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

 எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 4.30மணியளவில் திறக்கப்படவுள்ள இந்த நிலைய திறப்பு விழாவில் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்
( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )