மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் வாவியில் ஆணொருவரின் சடலம் கரை ஒதுங்கியது
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் முன்பு இனம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளமாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். 45 வயது மதிக்கத்தக்க இச்சடலம் வாவியின் நீரோட்டம் காரணமாக கோட்டைக்கு முன்பாக நீரினுள் உள்ள பாரிய கல்லொன்றில் தங்கி இருந்ததாகவும் சடலத்தை கரைக்கு இழுத்து வந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சடலத்தை அடையாளம் காண்பதற்காக மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பின்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பவுள்ளதாகவும், தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.



