வெற்றிபெறாத மாரி ஆல் வெறியான தனுஷ் பார்ட்டி வைத்து பந்தா
அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியாகி, எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத படம் "மாரி". ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம் வெளியானதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படியே புரட்டிப்போட்டு எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்கொண்டது எனலாம். "மாரி" படம் வெளியாகி குறைந்தது மூன்று நாட்கள் கூட, திரையரங்கு நிறைந்த காட்சிகளாக(ஹவுஸ் புல்) ஓடவில்லை. அந்த அளவுக்கு படம் ரசிகர்களுக்கு பிடித்ததுபோல அமையவில்லை என்பது தான் உண்மையாக இருக்க, "மாரி" திரைப்படம் ஏதோ சூப்பர்ஹிட் அடித்ததுபோல, பெரிதாக கொண்டாட்டம் எல்லாம் நடத்தி அசத்தியிருக்கிறாராம் நம்ம சுள்ளான். படம் வெளியாகி சிலநாட்களே ஆன நிலையில், படத்தில் பணியாற்றியவர்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறார் தனுஷ். அதுமட்டுமல்லாமல், தன் நட்புவட்டத்துக்குள் இருக்கும் நண்பர்கள் மற்றும் இயக்குனர்கள், நடிகர்கள் என திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் விருந்தும் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார் சூப்பர்ஸ்டார் மருமகன். இந்தநிலையில், சுள்ளானின் அன்பான அழைப்பை ஏற்று வந்து விழாவை சிறப்பித்த நண்பர்களுக்கு குழப்பமும், இந்தக் கூத்தைப் பார்த்து உள்ளூர ஒரே கேலியும் நமட்டுச் சிரிப்பும் தானாம். இருந்தும், மறந்தும் கூட வாயைத்திறக்கவே இல்லையாம். கிடைத்த பெரும் விருந்தை எதற்காக வெறுக்க வேண்டும் என்பதுதான் இதற்கான காரணம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இருந்தும், விருந்திற்கு வந்திருந்த ஒரு நண்பருக்கு வாய் சும்மா இருக்காமல் "படம் தான் ஹிட் அடிக்கவில்லையே, எதற்கு இவ்வளவு பெரிய விருந்து....?" என தனுஷிடம் நேரடியாக கேட்டு விட்டாராம். இதனால் சூடான சுள்ளான் "என்னுடைய படத்தை தோல்வி என்று சொல்ல நீ யார்...?" என்று அவருடன் முரண்பட்டுக் கொண்டதாகவும் கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.



