நட்டஈடு கோருகிறார் பிரதியமைச்சர்
கபரகட பிரதேசத்தில் கடந்த ஜூலை 23ஆந் திகதி சட்டரீதியான தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட போது தனக்கு இடையூறு விளைவித்த பொலீஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேரசிங்க உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஐந்து மில்லியன் மூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துருகிரிய பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலீஸ் பரிசோதகர், பொலீஸ் சார்ஜன் காமினி வங்ச, சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் மஹேன் குணசேகர, பிரதிப் பொலீஸ்மா அதிபர் கபில ஜயசேகர, பொலீஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் அதில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்
எம்.ஐ.அப்துல் நஸார்



