Breaking News

பெண் போலீஸ் அதிகாரி பொது இடத்தில் காருக்குள் உல்லாசம்

நைஜீரியாவின் லாகோஸ் மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் சார்ஜெண்ட்டாக பணியாற்றி வந்தவர் ஹெலென். நான்கு குழந்தைகளுக்கு தாயான இவர், பதவி உயர்வு பெற விரும்பி, ஒபா அகின்ஜோபி பகுதியில் உள்ள இகெஜா போலீஸ் கல்லூரியில் நடைபெற்ற ஒருமாத கால இன்ஸ்பெக்டர் தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அந்தக் கல்லூரியின் சட்டதிட்டங்களின்படி, பிற ஆடவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. இங்கே பயிற்சிக்கு வரும் பெண்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்லவும் கூடாது. இரவு வேளைகளில் விளக்கு அணைக்கப்பட்ட பின்னர் கல்லூரி வளாகத்துக்குள் சுற்றித் திரியக் கூடாது. இந்த நிபந்தனைக்கு உட்பட்டு நடந்து கொள்வதாக கையொப்பமிட்ட பின்னரே இங்கு வரும் ஆண், பெண்களுக்கு இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஒருநாள் இரவு இந்த போலீஸ் கல்லூரியின் காவலாளி கட்டிடத்தை சுற்றி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இருளான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் உள்ளே இருந்து பேச்சுக்குரல் கேட்பதை கவனித்துவிட்ட அவர் நெருங்கிச் சென்று பார்த்தபோது, காரினுள் ஒரு ஆணும், பெண்ணும் ஆபாசக் கோலத்தில் கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். இருவரையும் வெளியே இறங்கி வருமாறு அவர் மிரட்டியதும், பிறந்தமேனியாக வெளியே வந்த ஒரு ஆண், நான் அவளது காதலன். நானும் போலீஸ்காரன்தான் என்று காவலாளியை திருப்பி மிரட்டினார். அப்படியானால், உன்னுடைய அடையாள அட்டையை காட்டு.., என்று காவலாளி கூறினார். காருக்குள்ளே இருந்து அடையாள அட்டையை கொண்டுவர போவதுபோல் ‘பாவலா’ காட்டிய அந்த நபர், இருளை சாதகமாக்கிக் கொண்டு போலீஸ் பயிற்சி கல்லூரியின் மதில் சுவரை தாண்டி எகிறிகுதித்து தப்பியோடி விட்டார். இந்த தகவல் அதே கல்லூரியில் இன்ஸ்பெக்டர் தேர்வு பயிற்சிக்காக வந்த அனைவருக்கும் தெரியவந்தது போலவே மாநில போலீஸ் தலைமை அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது. சம்பவத்தன்று அந்த ஆணுடன் தனிமையில் இருந்த கார் தனக்கு சொந்தமானதுதான் என்று ஹெலென் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, சார்ஜெண்ட்டாக இருந்து, இன்ஸ்பெக்டர் ஆகும் கனவுடன் பயிற்சி பெற சென்ற ஹெலென், தற்போது சாதாரண கான்ஸ்டபிளாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.