வானிலிருந்து பயங்கர சத்ததுடன் விழுந்த மர்ம பொருள்
கடந்த வெள்ளிக்கிழமை, சத்தீஸ்கர் மாநிலம் ஹாங்பூர் நகரில் உள்ளூர் மக்களுக்குபலத்த சத்தம் கேட்டு உள்ளது. உடனே வீட்டுக்குள் இருந்த அனைவரும் வெளியில் வந்து பார்த்து உள்ளனர். அப்போது ஒரு விசித்திரமான பொருள் ஒன்று பறந்து வந்து வயல் வெளியில் விழுந்து உள்ளது. சனிக்கிழமை இந்த பொருளை பத்திரிகையாளர் ராகுல் பாண்டித என்பவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார். மேலும், வானில் இருந்து விழுந்தது என தலைப்பிட்டு இருந்தார். ”சத்தீஸ்கர் மாநிலம் ஹாங்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பயங்கர சத்ததுடன் ஒரு பொருள் ஒன்று வானில் இருந்து வயல் வெளியில் விழுந்தது.” என ராகுல் அதில் தெரிவித்து இருந்தார். அந்த பொருள் என்ன வென்று தெரியவில்லை. டுவிட்டர் பாலோவர்கள் பலர் தங்கள் ஊகங்களை வைத்து பல கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர். சிலர் அதை ஜெட் என்ஜின் என கூறி இருந்தனர். சிலர் செயற்கைகோளின் பாகம் என கூறி இருந்தனர் இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சத்தீஸ்கர் மாநில ராய்பூர் விமான நிலையத்தில் டாக்கா-மஸ்க்யாட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது அதனுடன் தொடர்புடைய பாகமாக கூட இருக்ககூடும் என ராகுல் தெரிவித்து உள்ளார். ஒரு பாலோவர் கடவுள் தயாரிக்கும் பிரியாணி அண்டா என்றும், ஒருவர் வியாழன் கோலில் இருந்து எறியபட்ட கிண்ணம் எனவும் அவர்களுக்கு தோன்றிய கருத்து தெரிவித்து இருந்தனர். அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் அல்லது வேற்று கிரக வாசிகளின் விண்கலமாக இருக்கலாம் என்று ஒரு யூகமும் இருந்தது. அந்த வகையில், இந்த மர்மபொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக ராகுல் கூறியுள்ளார்.