எப்படி இருந்த இனியா இப்படி ஆயிட்டார்?
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து குமரியானவுடன் ஹீரோயின் ஆனவர் நடிகை இனியா. தமிழில் அவர் நடித்த ‘வாகை சூடவா’ படம் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்றாலும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவே வியந்து பாராட்டுகிற அளவுக்கு நல்ல நடிப்பை வெளிக்காட்டியிருந்தார் இனியா. தொடர்ந்து மெளனகுரு, சென்னையில் ஒரு மழைக்காலம் என ஹிட் படங்களில் நடித்தவருக்கு மார்க்கெட் சரிய ஆரம்பித்தது மாசாணி படத்தில் தான். மாஜி நடிகர் ராம்கி ஜோடியாக அப்படத்தில் நடித்தவரை அதன்பிறகு யாரும் சீண்டுவதாக இல்லை. அதையும் தாண்டி வந்த சில பட வாய்ப்புகள் கூட செக்ஸியான கெஸ்ட் ரோல், அயிட்டம் டான்ஸ் மாதிரியான வாய்ப்புகளே அமைந்தன. இதனால் நொந்து போன இனியா தனது மேனேஜரை தூக்கி விட்டு தனது அம்மாவை வைத்தே கால்ஷீட்டை கவனித்து வருகிறார். அம்மாவை மேனேஜராக போட்ட நேரமோ என்னவோ? வந்து கொண்டிருந்த ஒன்றிரெண்டு பட வாய்ப்புகளும் அடியோடு நின்று விட்டது. கைவசம் வைகை எக்ஸ்பிரஸ் என்ற ஒரே ஒரு தமிழ்ப்படத்தில் மட்டும் நடித்து வரும் இனியா, இசை ஆல்பங்கள், குறும்படங்கள், விளம்பரப் படங்கள் இவைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.