Breaking News

சர்வதேச லயன்ஸ் கழக ஆளுநர் மட்டக்களப்புக்கு விஜயம்

சர்வதேச லயன்ஸ் கழக ஆளுநர் விக்கும் பிரிய வீரக்கொடி நேற்று மட்டக்களப்பு விஜயத்தை மேற்கொண்டார்

மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொண்ட ஆளுனரை வரவேற்கும் முகமாக மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்களினால்   சமய கலாசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர் .                                                    

இதன் முதல் நிகழ்வாக  இன்று காலை மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றது . இதனை  தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது .

இதனை தொடர்ந்து மாமாங்க ஆலய வளாகத்தினை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டதுடன்  ,ஆலய வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது .
தொடர்ந்து மட்டக்களப்பு லயன்ஸ் கழக அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கணனிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் , மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்திற்கான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு லயன்ஸ் கழக அங்கத்தவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .








(லியோன்)