Breaking News

"சுற்றாடல் எம்மைக் காக்கும் – நாம் சுற்றாடலைக் காப்போம்"

"சுற்றாடல் எம்மைக் காக்கும் – நாம் சுற்றாடலைக் காப்போம்" 

“சுற்றாடல் எம்மைக் காக்கும் – நாம் சுற்றாடலைக் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் 2015ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை
சுற்றாடல் முன்னோடி மாணவர்களுக்கான பாசறை மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .

மத்திய சுற்றாடல் அதிகார சபை ஏற்பாட்டில்  அலுவலகப் பொறுப்பதிகாரி எஸ் .உதயராஜன் தலைமையில் 2015ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை சுற்றாடல் முன்னோடி மாணவர்களுக்கான சுற்றாடல் முன்னோடி பாசறை ,மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும்  சின்னம் சூட்டும் நிகழ்வும் இன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பிராந்திய நிலையத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்  எம் .டி .எ .நிசாம் ,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் ,மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் கே .என் .கே .பெரேரா ,கிழக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் எம் .சிவகுமார் ,மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் மற்றும் மாவட்ட பாடசாலைகளின் சுற்றாடல் முன்னோடி ஆசிரியர்கள் ,மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .




(லியோன் )