Breaking News

ஹாய் எப்டி இருக்கே...? செடிகளிடம் பேச 3 ஊழியர்களை நியமித்த ‘பூ’ நிறுவனம்

இங்கிலாந்தில் இயங்கி வரும் பூ வளர்ப்பு நிறுவனம் ஒன்று, தினமும் பூக்களிடம் பேசவும், பாட்டுப் பாடவும் என மூன்று ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இங்கிலாந்தில் இயங்கி வரும் பி அண்ட் க்யூ என்ற நிறுவனம் தோட்டத்தை செழுமைப்படுத்துவது தொடர்பான பணிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்குக் கீழே இயங்கும் பூ வளர்ப்பை முதன்மையாகக் கொண்ட நிறுவனத்தில் சமீபத்தில் மூன்று ஊழியர்கள் புதிதாக பணியில் அமர்த்தப் பட்டனர். இவர்களது வேலை என்ன தெரியுமா? தினமும் அலுவலகத்திற்கு வந்ததும், அங்குள்ள தோட்டத்தில் உள்ள செடிகளில் மலர்ந்துள்ள பூக்களிடம் பேச வேண்டும், பாட வேண்டும்.