Breaking News

14 பேரை கொன்று தின்ற கொடூர பாட்டி

ரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ் பர்க்கை சேர்ந்தவர் தமரா சம்சனோவா  ( வயது 68) அங்குள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். கடந்த வாரம்  இவரது நண்பர் வாலண்டினா உளனோவா ( வயது79) என்பவரை கொலை செய்ததாக ரஷ்ய போலீசார் இவரை கைது செய்தனர்.  போலீசார் அங்கிருந்த சிசி டிவியை ஆய்வு செய்ததில் வாலண்டினாவின் உடல் பாகங்களை சம்சனோவா  ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்து இருந்தது உறுதியானது. இதை தொடர்ந்து  போலீசார் பாட்டி சம்சனோவா வின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து போலீசார் ஒரு டைரியை கைபற்ற அதன் மூலம் இந்த 69 வயதான பாட்டி  14  பேரை கொலை செய்து இருக்கும் பயங்கர தகவல் வெளியாகி உள்ளது.இந்த கொலைகார கொடூர பாட்டி தான் கொலை செய்தவர்களின் தலை மற்றும், நுரையீரல் , கை கால்களை வெட்டி எடுத்து இருப்பார் என போலீசார் சந்தேகபடுகின்றனர். ஓய்வூதியம் பெற்று வரும் இந்த பாட்டி  நர மாமிசம் சாப்பிடும் காட்டு மிராண்டிகளோடு ஒப்பீடுகின்றனர் போலீசார். 12 ஆண்டுகளுக்கு  முன் காணாமல் போன ஒரு  வியாபாரியின் அடையாள அட்டை பாட்டியின் வீட்டில் கண்டெடுக்கபட்டு உள்ளது. அவரது தலை , கால் மற்றும்  கைகளை பாட்டி வெட்டி எடுத்து உள்ளார். அங்கு இருந்த டைரியில் ”எனது வீட்டில் வாடகைக்கு இருந்த வாலண்டினாவை அவரது உடல் பாகங்களை பாத்ரூமில் வைத்து கத்தியால் வெட்டினேன். பின்னர்  உடல் பாகங்களை பிளாஸ்டிக் பேக்கில் போட்டு தூக்கி எறிந்து விட்டதாக”  கைப்பட எழுதி உள்ளார். கோர்ட்டில் ஆஜர் படுத்தபட்ட போது பாட்டி சம்சனோவா இந்த நீதி மன்றம் கொடுக்கும் எததனை வருட சிறை  தண்டனையையும் ஏற்று கொள்ள தயாராக் இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.