முதல் டெஸ்ட்டுக்கு முன்பாக முரளி விஜய் காயம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் காயமடைந்துள்ளார். பயிற்சி ஆட்டத்தின் முதல் நாளில் அவரால் ஆட முடியாமல் போய் விட்டது. இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் சரியாகி விடுவார் என நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 12ம் தேதி காலே நகரில் முதல் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே தொடங்குகிறது.



