Breaking News

ரொம்பக் கேவலம்... ஆஸ்திரேலிய வீரர்களை விட அதிக ஸ்கோர் எடுத்த எக்ஸ்ட்ரா...!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் மிகக் கேவலமாக ஆடி 60 ரன்களில் சுருண்டு போனதை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர்களை விட அவர்கள் பெற்ற உபரி ரன்கள்தான் அதிகம் இருந்தது என்பது ரொம்பக் கேவலமாகி விட்டது ஆஸ்திரேலியர்களுக்கு. இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அபாரமாக பந்து வீசி 8 விக்கெட்களைச் சாய்த்து வெறும் 15 ரன்களை மட்டுமே கொடுத்ததால், ஆஸ்திரேலியா முற்றிலும் முடங்கிப் போய் விட்டது. டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியா இப்படி ஒரு கேவலமான ஸ்கோரை எடுப்பது இது 7வது முறையாகும். கடந்தக 79 வருடத்தில் இது ஆஸ்திரேலியாவுக்கு 2வது மிகக் குறைந்த ஸ்கோராகும். கடைசியாக 2011ம் ஆண்டு கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது 47 ரன்களில் சுருண்டிருந்தது ஆஸ்திரேலியா. 25 பந்துகளில் 5 விக்கெட் காலி நேற்றைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தின்போது 4.1 ஓவர்களில் அதாவது 25 பந்துகளில் முதல் 5 விக்கெட்களையும் பறி கொடுத்திருந்தது ஆஸ்திரேலியா. 2002க்குப் பிறகு ஒரு அணி இவ்வளவு குறுகிய காலத்தில் 5 விக்கெட்களை இழப்பது இதுவே முதல் முறையாகும்.