ஸ்ருதிஹாசனின் இன்னொரு அவதாரம்.. இனி படமும் எடுப்பார்!
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நாயகியாக விளங்கும் நடிகை சுருதிஹாசன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பாடகி, இசையமைப்பாளர் மற்றும் நடிகை என பன்முகங்களைக் கொண்ட சுருதிஹாசன் அடுத்து தயாரிப்புத் துறையிலும் கால் பதித்திருக்கிறார். 'இசிட்ரோ' எனப் பெயரிடப்பட்டுள்ள இவரது புரடக்ஷன் நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக குறும்படங்கள் எடுக்கவிருக்கிறார். வித்யாசமான, அதே சமயம் கொஞ்சம் அனிமேஷன் மற்றும் கிராஃபிக் சார்ந்த குறும்படங்களாக அதிகம் எடுக்க முடிவெடுத்திருக்கிறார் சுருதி.
தயாரிப்பாளர் என்றாலும் கூட சுருதியின் இசை இந்தப் படங்களில் இருக்காதாம் முற்றிலும் இளம் படைப்பாளிகளை தேர்வு செய்து அவர்களின் இசையில் படங்கள் எடுக்க முடிவெடுத்திருக்கும் சுருதி அதற்காக ஆடிஷனை நடத்தி வருகிறார். மகளின் இந்த முயற்சிக்கு தந்தை கமலும் ஆதரவு தெரிவித்திருக்கிறார் மேலும் "நிறுவனம் ஆரம்பிப்பது பெரிதல்ல எந்த மாதிரியான படைப்புகளைத் தருகிறோம் என்பதுதான் முக்கியம்" என்று மகளுக்கு அறிவுரையும் வழங்கியிருக்கிறார்
சுருதிஹாசன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரான "இசிட்ரோ", சத்தியமாக தமிழ் மொழி அல்ல இது ஒரு அக்மார்க் கிரேக்க மொழி. தந்தை எட்டடி பாய்ந்தால் மகள் பதினாறடி பாய்கிறாரே...



