அந்த நமீதா போனா என்ன.. இந்த நமீதா இருக்காங்களே...!
அது ஒரு "புயல்" காலம்.. வெள்ளித் திரை எங்கும் நமீதா வியாபித்திருந்த காலம்.. இப்போது அந்தப் புயல் எங்கே போனது என்றே தெரியவில்லை. ஆனால் இன்னொரு அழகுப் புயல் தமிழை தாலாட்ட வரப் போகிறது. வருகிறது என்று சொல்வதை விட ஏற்கனவே ஒரு சின்ன விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறது.. மீண்டும் ஒரு மெகா விஜயத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர்தான் நமீதா பிரமோத். சூரத்தெல்லாம் போக வேண்டியதில்லை இவரைப் பார்க்க. தோ... பக்கத்தில், கொச்சியில்தான் குடியிருக்கிறார். மலையாளத்தில் அழகழகான படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இந்த நமீதா அங்குள்ள இளம் தலைமுறை நடிகைகளில் சற்றே கவனிப்புக்குரியவராக வலம் வந்து கொண்டிருப்பவர்.



