போலீசாரிடம் இருந்து தப்பிக்க கைவிரலை கடித்து தின்ற கார் திருடன்
அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விலை உயர்ந்த ஆடம்பர 'மெர்சிடெஸ்' காரை ஒரு வாலிபர் ஓட்டி வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரது பெயர் கென்சோ ராபர்ட் (20). புளோரிடாவை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவர் அந்த காரை திருடி வந்துள்ளது தெரிய வந்தது. அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரிக்க வேனில் அமர வைத்து இருந்தனர். போலீஸ் நிலையம் சென்றவுடன் கைரேகை மூலம் கார் திருடியதை போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என கென்சோ ராபர்ட்ஸ் பயந்தார். எனவே, தனது கை விரல்களில் இருந்த மோற்புற தோலை கடித்தார். அத்துடன் சேர்த்து விரலின் சதையையும் தின்று விழுங்கினார்.அப்போது வேதனை தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் வந்தது. இருந்தாலும் வலியை பொறுத்துக் கொண்டு தனது விரல் சதைகளை கடித்து தின்றார். அக்காட்சி கண்காணிப்பு காமிராவின் வீடியோவில் பதிவானது. இதற்கிடையே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட கென்சோ ராபர்ட்டை கார் திருடன் என அதி தொழில் நுட்ப ஸ்கேனர் மூலம் போலீசார் கண்டு பிடித்தனர். கார் திருடன் கென்சோ ராபர்ட்ஸ் பழைய குற்றவாளி ஆவான். இவன் லைசென்சு இல்லாத துப்பாக்கி உள்ளிட்ட ம் வைத்திருந்ததாக அவன் மீது ஏற்கனவே போலீஸ் வாரண்டு உள்ளது. போலி கிரிடிட் கார்டு வைத்திருந்த தாகவும், ஆட்டோ திருடியதாகவும் அவன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் வழங்கியதால் அவரது லைசென்சு முடக்கப் பட்டு கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.



