Breaking News

அரை நிர்வாணத்தில் தமன்னா.. கதறவிடும் ரசிகர்கள்.. வக்காலத்து வாங்கும் டாப்ஸி

இதுவரை அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த தமன்னா ‘பாகுபலி’ படத்தின் பாடல் காட்சி ஒன்றில் முதன் முறையாக டாப்லெஸ் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த புகைப்படம் படம் ரிலீஸ் ஆகும் வரையிலும், ரிலீஸ் ஆன பிறகும் வெளியிடப்படாமலே இருந்தது. ஆனாலும் படத்திலிருந்து இக்காட்சியை இணைய தள பேர்விழிகள் திருட்டுத்தனமாக உருவி வெளியிட்டனர். தமன்னாவின் பின்புற டாப்லெஸ் போஸை இணைய தளத்தில் பார்த்தவர்கள் தாறுமாறாக கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். இயக்குநர் முதல் ஹீரோவரையும் இந்த தாக்குதல் தொடர்ந்தது. இதனால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் தமன்னா. ஆனால் அவருக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறார் டாப்ஸி. ‘ஹீரோயின்களுக்காக உருவாக்கப்படும் பாத்திரங்கள் எல்லாமே ஒரே மாதிரியாக உள்ளது. ஒன்று அவள் அடாவடியாக இருப்பாள் அல்லது அன்பை பொழிபவளாக இருப்பாள். இதுவும் இல்லாவிட்டால் வில்லியாகவும் தேவதையாகவும் இருப்பாள். அப்பாவித்தனமாக கதாபாத்திரங்கள்தான் பெரும்பாலும் தரப்படுகிறது. தமன்னாவை தாக்கி இணைய தளத்தில் வந்த மெசேஜ்களை பார்த்தேன். இது திரைக்கு பின்னால் நடிகைகள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. தமன்னா திறமையானவர். அவரை மதிக்கிறேன்’ என்றார் டாப்ஸி.