Breaking News

கல்யாணப் பெண்ணாய் ஜொலிக்கப் போகும் கமல் பொண்ணு அக்‌ஷரா!

டெல்லியில் நடைபெற உள்ள மணப்பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் பேஷன் ஷோவில் நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ரீனா டாக்கா. இவர் இந்தியா மற்றும் உலகளவில் நடக்கும் பெரும்பாலான பேஷன் ஷோக்களில் தனது தனித்துவமான ஆடை வடிவமைப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

பூக்களால் நிறையும் ஆடைகள்: ரீனா டாக்கா தனது ஆடையை பூக்களால் வடிவமைக்க இருக்கிறார். தன்னுடைய இந்த மணப்பெண்களுக்கான பிரத்யேக தொகுப்பில் முதன்மை மாடலாக அக்‌ஷரா ஹாசன் இடம்பெற இருப்பதாக ரீனா தெரிவித்தார்.