நான் நடிகர்களை காதலிக்கலை… மாப்பிள்ளை கிடைத்த உடன் திருமணம்:
மாப்பிள்ளை கிடைக்கணுமே? நான் எந்த நடிகரையும் காதலிக்கவில்லை. நிறைய கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது வேறு எந்த உறவும் கிடையாது. எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்வேன்.
15 ஆண்டுகாலமாக திரைப்பட உலகில் இருந்தும் நடிகர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாக கூறியுள்ளார் நடிகை ஸ்ரேயா. வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள், பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ரேயா. இஷ்டம் என்ற தெலுங்கு படம் மூலம் 2001ல் திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தார் ஸ்ரோயா. எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் வொலிவுட்டிற்கு வந்தாலும், மழை என்ற படம்தான் தமிழில் நல்ல இடத்தினை கொடுத்தது.



