கடும்போக்குவாத யூதத் தலைவரின் தடுப்புக்காவல் நீடிப்பு
பலஸ்தீன குழந்தையொன்றை எரித்துக் கொன்றதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கடும்போக்குவாத யூதத் தலைவரின் தடுப்புக் காவலை செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய நீதிமன்றமொன்று நீடித்துள்ளது. வடக்கு இஸ்ரேலிய நகரான நஸாரத்திலுள்ள நீதிமன்றமே மியிர் எடிங்கரின் தடுப்புக்காவலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடித்துள்ளது. யூத கடும்போக்குவாத நடவடிக்கைகள் காரணமாக எடிங்கர் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டார். எடிங்கரின் தாத்தா மியிர் கஹானே 'கச்' என்ற அரபிய எதிர்ப்பு இனவாத அமைப்பினை உருவாக்கியவராவார்.
எம்.ஐ.அப்துல் நஸார்



