காத்தான்குடி பிரதேசத்தில் உதவி தேர்தல் ஆணையாளரின் பணிகளுக்கு இடையூறு.
காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சிலரை கைது செய்வதற்காக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினரால் குறித்த பிரதேசத்தில் கலாசார மத்திய நிலையத்தில் பெண்களுக்கான மாநாடு ஒன்று நேற்று நடத்தப்பட்டிருந்தது. மாநாட்டில் பங்கு பற்றிய குறித்த கூட்டமைப்பு உறுப்பினர் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் தனது விருப்பு இலக்கம், பெயர், சின்னம் உள்ளிட்டவை பொறிக்கப்பட்ட பொருட்களை விநியோகித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் இடம்பெற்ற இந்த நடவடிக்கை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருக்கு வழங்க பட்ட முறைபாட்டை அடுத்து நிகழ்வு தொடர்பாக ஆராய்வதற்காக காத்தான்குடி பொலிஸ் அதிகாரிகளுடன் சென்ற உதவி தேர்தல் ஆணையாளரின் பணிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.



