Breaking News

யாருக்காகவும் உன்னை மாத்திக்காதே - சூரிக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்

நீ கடைசிவரை நீயாகவே இரு. யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே என பரோட்டா சூரிக்கு அறிவுரை கூறியுள்ளார் அஜீத். ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்த சூரி, அடுத்து சிவா இயக்கும் படத்தில் அஜீத்துடன் நடித்து வருகிறார். இதுகுறித்து சூரி கூறுகையில், "இதுவரை அஜீத்துடன் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் இந்தப் படத்தில் நிறைவேறிவிட்டது.

படப்பிடிப்பில் அஜித் என்னிடம் கூறியவை மறக்க முடியாதவை. 'நீ எப்போதும் நீயாகவே இருக்க வேண்டும். யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே. உன் வாழ்க்கைத் தரத்தை வேண்டுமானால் மாற்றிக் கொள். ஆனால் உன்னுடைய சுபாவத்தை மாற்றாதே,' என்று கூறினார். அதை நிச்சயம் நான் கடைப்பிடிப்பேன்," என்றார். பரோட்டா சூரியின் அடுத்த ஆசை ரஜினி படத்தில் நடிப்பதுதானாம். அஜீத் அட்வைஸ்படி நடந்தா அந்த வாய்ப்பும் கைகூடப் போகுது!