மலிங்காவின் மண்டையை பார்க்காதீர்கள்.. மனதை பாருங்கள்: சச்சின்
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா உலக தரமிக்க பந்து வீச்சாளர் மட்டுமின்றி, சிறந்த ஜென்டில்மேன் என்று மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது; வித்தியாசம் உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளர் யார் என்று கூறுவது கஷ்டமான விஷயம். மலிங்கா மிகச்சிறந்த பவுலராக செயல்பட்டுவருகிறார். அவரது பந்து வீச்சு ஸ்டைல் மிகவும் வித்தியாசமானது. உலகிலுள்ள எந்த ஒரு பவுலரும் அவரது பந்து வீச்சு ஸ்டைல் போல வீசி பார்த்ததில்லை.



