நாமலுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவால் FCID அழைப்பு டுவிட்டரில் ஒரு குறிப்பு.
அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனும்மாகிய நாமல் ராஜபக்சேவுக்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 12ம் தேதி நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் டுவிட்டர் குறிப்பில், இவ் அழைப்பாணையின் நோக்கம் தங்களுடைய தேர்தல் நடவடிக்கைகளை தடுப்பதாகும். எது எவ்வாறாயினும் தன்னுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.




