Breaking News

நான்தான் இருக்கேன்ல புயலைக் கிளப்பிய பூனம் பாண்டே!

ஆபாச இணையதளங்களை அரசு தடை செய்தால் என்ன. நான்தான் இருக்கேனே என்று கூறி பூனம் பாண்டே போட்ட டிவிட், டிவிட்டர் உலகில் பரபரப்புப் புயலைக் கிளப்பியுள்ளது. டிவிட் போட்டதோடு நில்லாமல் அவர் #PornamPandeyTohHaiNa என்று ஹேஷ்டேக் வேறு போட்டு டிரெண்டிங் ஆக்கி விட்டார். கூடவே தனது டிவிட்டர் பக்கத்திலும் கவர் படமாக கவர்ச்சிப் படங்களையும் போட்டு வைத்துள்ளார். புரபைல் படமோ புல்லரிக்க வைக்கிறது. கவர்ச்சியை வைத்தே பிரபலமானவர் பூனம் பாண்டே. இவருக்கு மாடலிங்தான் தொழில் என்றாலும் தனது கவர்ச்சியை பறை சாற்றி போஸ்ட் போடுவதே பிரதான தொழிலாக மாறியுள்ளது.

சர்ச்சைதான் மூலதனம் எல்லோரும் திறமையை மூலதனமாக கொண்டு முன்னேறுவார்கள். இவரோ, கவர்ச்சியை வைத்து சர்ச்சையைக் கிளப்பி அதை வைத்து மேலே வந்தவர்.