Breaking News

ராதிகா ஆப்தே ஹீரோயின் அப்படின்னா ரஜினிக்கு மகளாக நடிக்கப் போவது யார்?

ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில், ரஜினிக்கு மகளாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி உலாவர ஆரம்பித்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினி ஒரு தாதா வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு இணையாக ராதிகா ஆப்தே நடிக்கிறார்.

ஜோடியா இல்லையா என்பதை சஸ்பென்ஸில் வைத்திருக்கிறார் ரஞ்சித். படத்தில் ரஜினிக்கு வயது வந்த மகள் கேரக்டர் உள்ளதாம். இந்த வேடத்தில் சாதரணமாக ஒரு புதுமுகம் நடிப்பசதை விரும்பவில்லையாம் ரஜினி. பிரபல இளம் நடிகைகளில் ஒருவரை நடிக்க வைக்குமாறு ரஞ்சித்திடம் கூறியுள்ளாராம். கதைப்படி இந்தப் பாத்திரம் உணர்ச்சிகரமானது என்பதால் நடிக்கத் தெரிந்த நடிகையைத் தேடிக் கொண்டிருக்கிறாராம் ரஞ்சித். அடுத்த வாரத்தில் யார் அந்த நடிகை என்பது முடிவாகிவிடும் என்கிறார்கள்.