நாட்டுமக்களிற்கு துரோகம் இழைத்து எதிர்பார்ப்பை சீர்குலைக்கப் போவதில்லை ஜனாதிபதி.
ஜனவரி 8ஆம் திகதி தன்னை ஜனாதிபதியாக நியமித்த நாட்டுமக்களிற்கு தாம் துரோகம் இழைத்து எதிர்பார்ப்பை சீர்குலைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டார்.
அந்த பயணத்தை வலுப்படுத்துவதற்கான புதிய தேசிய அரசாங்கம், எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



