Breaking News

கே.பி போன்ற புலிகளின் தலைவர்களை அரவணைத்த மகிந்த கூறவருவதென்ன ?

17ம் திகதி தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் எம் நாட்டில் சக்தி மற்றும் திறமை வாய்ந்த பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாக்கப்படுவார்கள் என்று மகிந்தராஜபக்ஷவின் தரப்பில் அபத்தமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் தேர்தலின் பின்னர் மகிந்தவை விட பல மடங்கு சக்தி மற்றும் திறமை வாய்ந்த பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படுவார். அவரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. 

மகிந்தவை காட்டிலும் அதிக முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விடுதலைப் புலிகள் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அவ்வாறான நிலைமையில் அவர் எவ்வாறு மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க இடமளிப்பார். இவ்வாறான குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை. அத்துடன் இது போன்ற குற்றச்சாட்டுகளை கே.பி போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களை அரவணைத்துக் கொண்டு அரசியல் புரிந்த மகிந்தராஜபக்ஷ முன்வைப்பது ஆச்சரியமானது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.