பாதாள உலக குழுவினருக்கு இலங்கையில் இடமில்லை - ரணில்.
இலங்கையில் பாதாள உலக குழுவின் செயட்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாரியப்பொலவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த காலங்களில் பாரிய அளவான பாதலஉலக குழுவின் வன்முறைகள் இடம்பெற்று வந்தன. தொடர்ந்தும் அவ்வாறான செயட்பாடுகள் நடைபெறுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் அவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம் எதிர்காலத்தில் இடமளிக்கப் பொவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இத்தேர்தலில் மக்களை குழப்பி வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக, மகிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் போலியான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
முன்னர் விடுதலைப் புலிகள் குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது பாதாளஉலக குழுவினர் குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இவை அனைத்து மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுகள் என்று அவர் கூறியுள்ளார்.



