Breaking News

காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு கொழும்பில்.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டு ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 08ஆந் திகதி முற்பகல் 08.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது. மேல் மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு செப்டம்பர் மாதம் 08ஆம் மற்றும் 09ஆந் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. 15 நாடுகளின் பிதிநிதிகளும் மேலும் பல நாடுகளின் பார்வையாளர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.