ஜப்பானையும், பிலிப்பைன்ஸையும் உலுக்கிப் போட்ட “டைப்பூன் கோனி”- வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தவிப்பு
ஜப்பானையும், பிலிப்பைன்ஸ் நாட்டையும் தாக்கிய புயலான "டைப்பூன் கோனி" புயலுக்கு ஜப்பானில் இதுவரையில் 13 பேரும், பிலிப்பைன்ஸில் 36 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புயலால் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரண்டு நாடுகளும் உருக்குலைந்து போயுள்ளது. கோனி புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பானில் கிட்டதட்ட 10,000 பேர் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகின்றனர். கடும் புயல் மழை காரணமாக மின்சார ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



