ஆல் ஈஸ் வெல் அசினுக்கு 'நாட் வெல்'.. தோல்வியோடு விடைபெறுகிறார்?
ஆல் ஈஸ் வெல் படத்தோடு சினிமா உலகுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்ற முடிவோடு புதுப் படங்களை ஒப்புக் கொள்ளாமல், கல்யாண வேலைகளுக்கு ஓகே சொல்லியிருந்தார் அசின். படத்தின் மேல் அத்தனை நம்பிக்கை அவருக்கு. ஆனால் நினைத்தது நடக்கவில்லை. கடந்த வாரம் வெளியான ஆல் ஈஸ் வெல்... வெரி பேட் என்று ரிப்போர்ட் வந்துவிட்டது பாக்ஸ் ஆபீஸில்.
உமேஷ் சுக்லா இயக்கத்தில் அசின், அபிஷேக் பச்சன் நடித்திருந்தனர் இந்தப் படத்தில். காமெடிப் படமாக எடுக்கப்பட்ட ஆல் ஈஸ் வெல், வெளியான முதல் வாரத்தில் ரூ 8.72 கோடியை மட்டுமே வசூலித்தது. இந்தப் படத்துடன் மாஞ்சி தி மவுன்டெய்ன் படம் வெளியாகியிருந்தது. அந்தப் படமும் சுமாரான வசூலைப் பெற்றது. திங்கள் கிழமைக்குப் பிறகு ஆல் ஈஸ் வெல் படத்துக்கான வசூல் இன்னும் குறைய ஆரம்பித்துள்ளது. ஆல் ஈஸ் வெல் படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என்று திட்டமிட்ட அசினுக்கு இது பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாம்.



