Breaking News

13.09.2015 நடத்தப்பட்ட இறுதி போட்டியில் ஏறாவூர் நகர பிரதேச இளைஞர் கழகம் தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவு


(அமிர்தகழி நிருபர் )

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட மட்ட உதைப்பந்தாட்ட இறுதி விளையாட்டு போட்டி இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது .

13.09.2015   இடம்பெற்ற உதைப்பந்தாட்ட  போட்டி நிகழ்வானது மாவட்ட இளைஞர் சேவைகள் அலுவலகர் திருமதி .நிசாந்தி அருண்மொழி தலைமையில் உதவி பணிப்பாளர் எம் எல். எம் .என் .நைருஸ் வழிகாட்டலுக்கு அமைவாக இடம்பெற்றது
இப்போட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில்  07 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள உதைப்பந்தாட்ட குழுக்களில்  பிரதேச செயலக பிரிவுகளில் முதல் இடங்களை பெற்ற 07 குழுக்களுக்கான இறுதி போட்டியே 13.09.2015  இடம்பெற்றது .

தேசிய மட்ட தெரிவு போட்டியில் கலந்துகொள்வதற்காக  மட்டக்களப்பு மாவட்ட   பிரதேச இளைஞர் கழகங்களான  மண்முனை வடக்கு , ஏறாவூர் நகரம் ,மண்முனை மேற்கு, மண்முனை பற்று , காத்தான்குடி , கோரளைப்பற்று  மத்தி , கோரளைப்பற்று  வடக்கு ஆகிய 07 உதைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையில்  போட்டிகள் இன்று  நடத்தப்பட்டன  .


13.09.2015  நடத்தப்பட்ட இறுதி போட்டியில் ஏறாவூர் நகர பிரதேச இளைஞர் கழகம்  தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .