சீபா ஒப்பந்தம் வேண்டாம் : ஐ.தே.மு ஆர்ப்பாட்டம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது, சீபா ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை(14) தேசிய சுதந்திர முன்னணி, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. விடுதலை புலிகள் அமைப்புடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டோம் என்று கூறி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இரகசியமாக அந்த ஒப்பந்தத்தில் இதற்கு முன்னர் கைச்சாத்திட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.