Breaking News

மகள்களை கற்பழித்த எயிட்ஸ் பாதித்த தந்தை: மும்பையில் பயங்கரம்

தனக்கு எயிடஸ் இருப்பது தெரிந்தும் பெற்ற மகளையே கற்பழித்த 40 வயதான தந்தை மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின் காவல் துறையினர் குற்றவாளியை மருதுவ சோதனைக்கு உட்படுத்தினர் அதில் அவருக்கு எயிட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வருடமாக அவர் எயிட்ஸ்க்கு மருந்து எடுத்து வருவதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனினும் அவரது மனைவி மற்றும் மகளுக்கு எயிட்ஸ் இல்லை என்று காவல்  துறையினர் தெரிவித்தனர்.

21 வயதான அவரது மகள் மற்றும் 12 வயதான இளைய சகோதரி ஆகிய இருவரும் தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டடார் என  காவல் துறைக்கு தெரியவந்தது. இது குறித்து அவரது மகள் கூறுகையில், இந்த சம்பவம் வெளியுலகத்திற்கு தெரிந்துவிடும் என எனது தாய் பயந்தார். இதனால் என்னுடைய வருத்தங்களை யாரிடமும் கூற  முடியவில்லை. இந்நிலையில் தனது 12 வயது தங்கையும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், அவரின் அருகாமையில் உள்ளவரின் உதவியுடன் காவல் துறையில் புகார் தெரிவித்தேன் என்றார்.

குற்றம்சாட்டப்பட்ட அவர் கார்ப்பென்டராக பணிபுரிபவர், அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.