Breaking News

எண்ணெய்யில் எவ்வளவு, விஷயங்கள்

சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் குறித்து பலரும் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. பெரும்பாலும் அனைவருமே விளம்பரத்தில் கூறப்படும் விஷயங்களை அடிப்படையாக வைத்துத் தாங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்யை தேர்வு செய்கிறார்கள். ஆனால் அதேசமயம் அந்த எண்ணெய் உடலுக்கு நல்லதா என்பதை கவனிக்க மறந்து விடுகிறார்கள். தற்போது சூரிய காந்தி எண்ணெய் பயன்பாட்டில் அதிகரித்துள்ளது. இதையும் அளவோடு பயன்படுத்துவதே நல்லது. சூரிய காந்தி எண்ணெய்யுடன், லினோலிக் அமிலம் குறைவாக உள்ள பாமாயிலுடன் கலந்து உபயோகிக்கலாம். பொதுவாகவே, எந்த ஒரு எண்ணெய்யாக இருந்தாலும், தொடர்ந்து ஒரே எண்ணெய்யை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, மாதத்தில் ஒரு முறையாவது கடலை எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய் என சுழற்சி முறையில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. அரிசி உமி எண்ணெய்யில் வைட்டமின் இ அதிகளவில் உள்ளது. ஆலிவ் எண்ணெய் உடலுக்கு நல்லது என்றாலும் விலை அதிகம் என்பதால், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர் அதை வாங்கிப் பயன்படுத்துவது இயலாதது.  எந்த எண்ணெய்யாக இருந்தாலும் அளவோடு சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நலம். பாமாயில் எண்ணெய் உடலுக்கு மிகவும் கெடுதல் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், சூரியகாந்தி எண்ணெய்யால் நமது உடலுக்குக் கிடைக்காத கொழுப்புச் சத்தைப் பெற, சூரியகாந்தி எண்ணெய்யுடன் கலந்தோ அல்லது ஒருநாள் சூரிய காந்தி எண்ணெய், மறுநாள் பாமாயில் என்று மாற்றி மாற்றி உபயோகிப்பதோ நல்லது.