Breaking News

சுத்துப்பட்டு 93 கேலக்ஸிகளிலில் அறிவார்ந்த வேற்றுகிரகவாசிகள் ....


நம்மைச் சுற்றியுள்ள 93 பால்வெளிகளில் நம்மை விட மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை என நெதர்லாந்து ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. வேற்றுகிரகவாசிகள் குறித்த செய்திகள் முன்பை விட இப்போது அதிக அளவில் பேசப்படுகிறது. அவ்வப்போது பறக்கும் தட்டைப் பார்த்ததாக சிலர் கூறுவதுண்டு. வேற்றுகிரகவாசிகளைப் பார்த்ததாக கூட பலர் கூறியுள்ளனர். இது தொடர்பாக சில வீடியோ மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. இது தவிர செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்கிறார்கள் என நாசாவின் படங்களை ஆராய்ச்சி செய்து சிலர் பரபரப்பைக் கிளப்புவதுண்டு. ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு நமக்கு அருகில் உள்ள 93 பால்வெளி மண்டலங்களில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதற்காக வாய்ப்பே இல்லை என ஒரு ஆய்வு அடித்துக் கூறுகிறது.