சாப்பிடும் போதே செல்பி எடுக்க செல்பி கரண்டி அறிமுகம்
சாப்பிடும் போதே செல்பி எடுக்க செல்பி கரண்டி அறிமுகம்
செல்பி மோகம் இன்றைக்கு பலரையும் ஆட்டி படைத்து வருகிறது. அரசியல் தலைவர்கள் தொடங்கி இளைய தலைமுறையினர் வரையில் இந்த மோகம் உள்ளது. இதற்காக தற்போது செல்பி ஸ்டிக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. தற்போது அமெரிக்காவில் உள்ள ஸ்னாக்ஸ் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தனது உணவு பொருட்களை புரமோட் செய்வதற்காக இலவசமாக செல்பி கரண்டியை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு முனையில் உணவு பொருட்களை சாப்பிடும் போது மறுமுனையில் இணைக்கப்பட்ட செல்போன் மூலம் நம்மை படம் பிடித்துக் கொள்ளும் வசதி உள்ளதாம். என்னமா யோசிக்கிறாங்கப்பா... என்ன செல்பி கரண்டியை ஆர்டர் செய்ய போறீங்களா?



