CSN தொலைக்காட்சி சேவை மீது சில தடைகளும் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான யோசித ராஜபக்ஸவினால் நாடத்த பட்டுவரும் CSN தொலைக்காட்சி சேவையினை விற்கவும், குத்தகைக்கு விடவும் மற்றும் தற்காலிக கைமாற்றத்திற்கும், கடுவெல நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், நிதிமோசடி சட்டத்தின் கீழ் CSN தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர்களை விசாரணைக்கு உட்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தை, அமைச்சர் தயாகமகேவின் நிறுவனத்திற்கு, விற்பனை செய்ய எடுத்த முயற்சியின் காரணமாகவே இந்த அறிவித்தல் விடப்பட்டுள்ளது.