Breaking News

36 வயதினிலேவைத் தொடர்ந்து... மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் ஜோதிகா

நடிகை ஜோதிகா ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று உறுதியற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழின் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா திருமணம் செய்து கொண்ட பின் நடிப்பிற்கு முழுக்குப் போட்டு குடும்பத் தலைவியாக மாறினார்.

திருமணத்திற்குப் பின் சுமார் 8 ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படத்தின் மூலமாக மீண்டும் நடிக்க வந்த ஜோதிகாவை ரசிகர்கள் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றனர். நீண்ட வருடங்கள் கழித்து நடித்தாலும் முன்பு இருந்து அதே துள்ளலும் துறுதுறுப்பும் ஜோதிகாவிடம் மாறாமல் அப்படியே இருந்தது, இது ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது. எனவே ஜோதிகாவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர், தற்போது ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக ஜோதிகா ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் மற்றும் படம் சம்பந்தப்பட்ட முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறுகிறார்கள், இதுவும் நாயகியை மையப்படுத்தும் ஒரு கதையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். படம் மட்டுமன்று நிறைய விளம்பரங்களில் நடிக்கவும் ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக மும்பையில் முகாமிட்டிருக்கிறார் ஜோதிகா. வாடி ராசாத்தி...